/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரியம்மன் கோவிலில்பக்தர்கள் சிறப்பு வழிபாடு
/
மாரியம்மன் கோவிலில்பக்தர்கள் சிறப்பு வழிபாடு
ADDED : மார் 04, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாரியம்மன் கோவிலில்பக்தர்கள் சிறப்பு வழிபாடு
கிருஷ்ணராயபுரம்:சந்தையூரில், மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து இரும்பூதிப்பட்டி சந்தையூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை மாரியம்மன் கரகம் பாலித்து, சிறப்பு மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்து திருவீதி உலாவாக எடுத்து வரப்பட்டு கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, கிடா வெட்டி கொண்டாடினர். பக்தர்கள் சிலர் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.