/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புன்னம் பசுபதிபாளையத்தில்குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு
/
புன்னம் பசுபதிபாளையத்தில்குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு
புன்னம் பசுபதிபாளையத்தில்குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு
புன்னம் பசுபதிபாளையத்தில்குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு
ADDED : மார் 07, 2025 01:55 AM
புன்னம் பசுபதிபாளையத்தில்குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு
கரூர்,:க.பரமத்தி அருகில் உள்ள, புன்னம் பசுபதி பாளையத்தில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
க.பரமத்தி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நொய்யல் அடுத்த, மறவாப்பாளையம் காவிரி ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, அதிலிருந்து குழாய் மூலம் க.பரமத்தி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி உள்ளிட்ட, 564 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதில் புன்னம் பசுபதிபாளையத்தில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இங்குள்ள, குடியிருப்புகளுக்கு போதுமான அளவில் குடிநீர் வழங்கப்படுவதில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கையில்லை. இதனால், குடிநீருக்காக பல கி.மீ., துாரம் தேடி அலைய வேண்டி உள்ளது. கடந்த வாரம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், முற்றிலும் தண்ணீர் வினியோகம் தடைப்பட்டுள்ளது. உடனடியாக உடைப்பை சரி செய்து, இப்பகுதியில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.