தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்வழங்க பயனாளிகள் தேர்வு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்வழங்க பயனாளிகள் தேர்வு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்வழங்க பயனாளிகள் தேர்வு முகாம்


ADDED : மார் 07, 2025 01:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2025 01:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்வழங்க பயனாளிகள் தேர்வு முகாம்

கரூர்,:-கரூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய செயற்கை உறுப்பு உற்பத்தி கழகம் இணைந்து நடத்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க பயனாளிகள் தேர்வு முகாம் நடக்கிறது.

வரும், 10ல் கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் காலை 9:30 முதல் பிற்பகல் 2:00 மணி வரையும், 11ல், க.பரமத்தி ஊரக வாழ்வாதார இயக்க கட்டடத்தில், காலை 9:30 முதல் பிற்பகல் 2:00 மணி வரையும் முகாம் நடக்கிறது. முடநீக்கு சாதனம், செயற்கை கால், கை, மடக்கு

சக்கர நாற்காலி, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், ரோலேட்டர், மன

வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பயிற்சி சாதனம், பார்வையற்றோருக்கு பிரெய்லி வாட்ச், காதொலி கருவி போன்ற உபகரணங்கள், டாக்டர்களின் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்படும். மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், ரேஷன் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.

இத்தகவலை, கரூர் மாவட்ட கலெக்டர் தங்க வேல் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us