/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தைதரம் உயர்த்துவது அவசியம்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தைதரம் உயர்த்துவது அவசியம்
ADDED : மார் 07, 2025 02:48 AM
ஆரம்ப சுகாதார நிலையத்தைதரம் உயர்த்துவது அவசியம்
கரூர்:-தென்னிலை, துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டியது அவசியம்.தென்னிலை, துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒரு கிராம செவிலியர் மட்டுமே சிகிச்சை அளித்து வருகிறார். அவ்வப்போது நடக்கும் மருத்துவ முகாங்களில் மட்டுமே, டாக்டர்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள தென்னிலை கிழக்கு, மேற்கு, தெற்கு பஞ்சாயத்துகளில், 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் நோய் பாதிப்பிற்குள்ளாகும் போது மருத்துவ உதவி பெற இப்பகுதியில் இருந்து, 15 கி.மீ., தொலைவில் உள்ள கார்வழி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்கின்றனர்.
சுற்று வட்டார பகுதியில் மருத்துவமனை இல்லை என்பதால், அங்கு கூட்டம் அதிகமாக இருக்கிறது. நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. தென்னிலை துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை, ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தி டாக்டர்கள், செவிலியர்களை நியமித்து இப்பகுதி மக்களுக்கு முழு நேர மருத்துவ உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துகளுக்கு, முதலுதவி வழங்க தென்னிலை துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.