/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'நிறுத்தப்பட்ட திட்டங்களை அ.தி.மு.க.,ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்'

ADDED : மார் 08, 2025 01:32 AM
'நிறுத்தப்பட்ட திட்டங்களை அ.தி.மு.க.,ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்'
கரூர்:கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 77 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வாங்கலில் நடந்தது. மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சிக்கு முடிவுரை எழுத, இன்னும், 10 அமாவாசைகள் தான் உள்ளது. அதன் பிறகு, அ.தி.மு.க., ஆட்சிதான். கரூர் மாவட்டத்தில், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது.
பொய் வழக்கு போட்ட போலீஸ் அதிகாரிகள், கட்டாயம் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும். அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், கரூர் கட்சி அலுவலகத்தில், ஆப்பு அடிக்கும் அலுவலகம் அமைக்கப்படும். அதில், முதல் ஆறு மாதங்களுக்கு, அ.தி.மு.க.,வுக்கு துரோகம் செய்தவர்களுக்கு ஆப்பு அடிக்கப்படும்.
துரோகம் செய்தவர்கள் பட்டியல் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளிடம் தயாராக உள்ளது. தி.மு.க., ஆட்சி அமைந்ததும் பால் விலை, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, நிலவழிகாட்டி மதிப்பு உயர்வு என, தமிழக மக்களை கொடுமைப்படுத்தி வருகின்றனர். விரைவில், பஸ் கட்டணத்தையும் உயர்த்த உள்ளனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம் உள்ளிட்ட, மக்கள் நேரடியாக பயன்பெறும் திட்டங்களை நிறுத்தி விட்டனர். தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், நிறுத்தப்பட்ட திட்டங்களை எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., முதல்வராக இருந்து நிறைவேற்றுவார்.
இவ்வாறு பேசினார்.கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சின்னசாமி, காமராஜ், மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, ஜெ., பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், விவசாய அணி தலைவர் பாலமுருகன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்கவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.