/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்வாழை சாகுபடி பணி தீவிரம்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்வாழை சாகுபடி பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்வாழை சாகுபடி பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்வாழை சாகுபடி பணி தீவிரம்
ADDED : மார் 09, 2025 02:04 AM
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்வாழை சாகுபடி பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், நெல் அறு வடை செய்யப்பட்ட நிலங்களில், வாழை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் கடந்த மாதம் நெல் அறுவடை பணிகளில் ஈடுபட்டனர். அந்த நிலங்களில், அடுத்த சாகுபடி பயிராக வாழை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
நெல் அறுவடையான நிலங்களில், வாழை சாகுபடி செய்யும் போது வாழை கன்றுகள் விரைவில் வளர்ந்து, நல்ல முறையில் மகசூல் கிடைக்கிறது.
மேலும் புதிய வாழைக்கன்றுகள் நடுவதற்கும் ஏதுவாக நிலம் இருக்கிறது. ஆகையால், விவசாயிகள் தற்போது வாழை சாகுபடிக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இதில் ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி ஆகிய வாழை ரக நடவு பணி நடந்து வருகிறது.