தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ முனிமுக்தீஸ்வரர் கோவிலில் மாசிமகத்தை முன்னிட்டு தேரோட்டம்

முனிமுக்தீஸ்வரர் கோவிலில் மாசிமகத்தை முன்னிட்டு தேரோட்டம்

முனிமுக்தீஸ்வரர் கோவிலில் மாசிமகத்தை முன்னிட்டு தேரோட்டம்


ADDED : மார் 14, 2025 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2025 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முனிமுக்தீஸ்வரர் கோவிலில் மாசிமகத்தை முன்னிட்டு தேரோட்டம்

அரவக்குறிச்சி:சின்னதாராபுரத்தில், முனிமுக்தீஸ்வரர் கோவிலில், மாசி மகத்தை முன்னிட்டு கோவில் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சின்னதாராபுரத்தில், அகிலாண்டேஸ்வரி உடனுறை முனிமுக்தீஸ்வரர் கோவிலில், மாசி மகத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

கடந்த 5ம் தேதி விநாயகர் வழிபாடு, கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினமும் பல்லக்கு மற்றும் சிம்மவாகனம், காமதேனு, கைலாச, யானை வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்தது. பின்னர், அகிலாண்டேஸ்வரி உடனமர் முனிமுக்தீஸ்வரருக்கு

அபிஷேகம் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து கடை வீதியில் உள்ள தேர், நிலையிலிருந்து மேளதாளத்துடன் புறப்பட்டு மாரியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது. இரவு முழுவதும் பொதுமக்கள் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. இந்நிலையில் காலை, 10:40 மணிக்கு தொடங்கப்பட்ட தேரோட்டம், அந்த இடத்திலிருந்து புறப்பட்டு மதியம், 2:00 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.ஏற்பாடுகளை முனிமுக்தீஸ்வரர் திருப்பணி குழு மன்றம் மற்றும் கட்டளைதாரர்கள், சுற்றுப்புற பகுதி மக்கள் செய்திருந்தனர். பக்தர்

களுக்கு ஜூஸ், நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us