தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ இடிந்து விழும் நிலையில்மேல்நிலை குடிநீர் தொட்டி

இடிந்து விழும் நிலையில்மேல்நிலை குடிநீர் தொட்டி

இடிந்து விழும் நிலையில்மேல்நிலை குடிநீர் தொட்டி


ADDED : மார் 15, 2025 02:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2025 02:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடிந்து விழும் நிலையில்மேல்நிலை குடிநீர் தொட்டி

கரூர்:கரூர் அருகே, எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள, மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர்-திருச்சி சாலை மூலகாட்டனுாரில் கடந்த, 2006-07ல், சணப்பிரட்டி கிராம பஞ்சாயத்தாக இருந்த போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. அதன் மூலம், மூலகாட்டனுார் பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.

சணப்பிரட்டி கிராம பஞ்சாயத்து, 2011ல், கரூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. அதற்கு பிறகு, மேல் நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்தது. துாண்களில் உள்ள, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு, குடிநீர் தொட்டி மோசமாக உள்ளது.

கரூரில் இருந்து திருச்சிக்கு மூலகாட்டனுார் வழியாக நாள்தோறும் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், எந்நேரமும் இடிந்து விழும் நிலையில், பிரதான சாலையோரம் உள்ள, மேல்நிலை குடிநீர் தொட்டியால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சேதமடைந்த குடிநீர் தொட்டியை உடனடியாக, அகற்ற வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us