/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொழில் துறைக்கு முக்கியத்துவம்அளிக்கும் சிறப்பான பட்ஜெட்
/
தொழில் துறைக்கு முக்கியத்துவம்அளிக்கும் சிறப்பான பட்ஜெட்
தொழில் துறைக்கு முக்கியத்துவம்அளிக்கும் சிறப்பான பட்ஜெட்
தொழில் துறைக்கு முக்கியத்துவம்அளிக்கும் சிறப்பான பட்ஜெட்
ADDED : மார் 15, 2025 02:09 AM
தொழில் துறைக்கு முக்கியத்துவம்அளிக்கும் சிறப்பான பட்ஜெட்
கரூர்:கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் பி.கோபாலகிருஷ்ணன்:
தமிழக அரசின், 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் சிறப்பானதாக உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பட் ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ள்ளது.
மேலும், கல்வி, போக்குவரத்து, வீட்டு வசதி உள்ளிட்ட, பல்வேறு துறைகளுக்கும் வளர்ச்சியடையும் வகையில், அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் சிப்காட் அமைக்க, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால், வேலைவாய்ப்புகள் ஏற்படும். ஜவுளி துறையில் மூன்று ஆண்டுகள் பழமை வாய்ந்த, விசைத்தறிகளை மாற்றும் வகையில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரவேற்கத்தக்கது.
ஜவுளி துறையில் மேலும், மைல்கல்லாக, டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் துறை வளர்ச் சிக்கு ஆராய்ச்சி நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், டெக்ஸ்டைல்ஸ் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும்.