ADDED : மார் 18, 2025 01:52 AM
அ நிறம் | அளவு
வெங்கடரமண சுவாமி கோவிலில் வெள்ளி கருட சேவை
கரூர்:தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், மாசிமக தெப்ப திருவிழாவையொட்டி, சுவாமி வெள்ளி கருடசேவையில் அருள்பாலித்தார்
கரூர் அருகே, தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில் கடந்த, 4 ல் மாசிமக தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் கோவிலில் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. கடந்த, 10ல் திருக்கல்யாண உற்சவம், 12ல் தேர்த்திருவிழா, 14ல்
தெப்பத்தேர் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று மாலை மூலவருக்கு, சிறப்பு அபிேஷகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. பிறகு, உற்சவர் பெருமாள் வெள்ளி கருட சேவையில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நாளை ஆளும் பல்லாக்கு, வரும், 20 ல் ஊஞ்சல் உற்சவம், 21 ல் புஷ்பயாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
