/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாலத்தில் தடுப்பு சுவர் இல்லைவாகனங்களில் செல்வோர் அச்சம்
/
பாலத்தில் தடுப்பு சுவர் இல்லைவாகனங்களில் செல்வோர் அச்சம்
பாலத்தில் தடுப்பு சுவர் இல்லைவாகனங்களில் செல்வோர் அச்சம்
பாலத்தில் தடுப்பு சுவர் இல்லைவாகனங்களில் செல்வோர் அச்சம்
ADDED : மார் 28, 2025 01:09 AM
பாலத்தில் தடுப்பு சுவர் இல்லைவாகனங்களில் செல்வோர் அச்சம்
கரூர்:சேங்கல் பாலத்தில், தடுப்பு சுவர் இல்லாததால், அச்சத்துடன் வாகன ஓட்டுனர்கள் செல்கின்றனர்.
கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் சேங்கல் தரைப்பாலம் உள்ளது. இந்த சாலையில் உள்ள தரைப்பாலத்தை கடந்து, தினமும் பஸ்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தங்கள் விளை பொருட்களை, சேங்கல் வழியாக கரூருக்கு எடுத்து செல்கின்றனர். தரைப்பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்கப்படவில்லை. இப்பகுதியில் விளக்குகளும் கிடையாது. விவசாய விளை பொருட்களை விற்பனை செய்த பின், மீண்டும் தங்கள் வீடுகளுக்கு விவசாயிகள், வியாபாரிகள் செல்கின்றனர்.
இரவு நேரங்களில் வாகனங்கள், பாலத்தை கடந்து செல்லும் போது விபத்து அபாயம் உள்ளது. அதிலும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், வேகமாக வரும்போது தடுப்புகள் ஏதும் இல்லாததால், நிலை தடுமாறி பள்ளத்தில் விழுகின்றனர். தினமும், இந்த இடத்தில் விபத்து நடந்து வருகிறது.
எனவே, உடனடியாக பாலத்தின் மீது, இரு பக்கமும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.