தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாநகராட்சி பகுதியில் குழாய்உடைந்து ஆறாக ஓடும் குடிநீர்

மாநகராட்சி பகுதியில் குழாய்உடைந்து ஆறாக ஓடும் குடிநீர்

மாநகராட்சி பகுதியில் குழாய்உடைந்து ஆறாக ஓடும் குடிநீர்


ADDED : ஏப் 02, 2025 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2025 01:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாநகராட்சி பகுதியில் குழாய்உடைந்து ஆறாக ஓடும் குடிநீர்

கரூர்,:கரூர் மாநகராட்சி பகுதி யில், பல இடங்களில் குழாய் உடைந்து, குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது.

கரூர் மாநகராட்சி பகுதிகளில், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. அதற்காக காவிரியாற்றில், வாங்கல், கட்டளை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீரேற்று நிலையங்கள் மூலம், மேல்நிலை குடிநீர் தொட்டி

களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. பிறகு, குழாய் மூலம் பொது குழாய் மற்றும் வீடுகள், வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட இணைப்புகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

புதிய குடிநீர் திட்டத்தின்படி, பழைய கரூர் மாநகராட்சி, பழைய தான்தோன்றிமலை மாநகராட்சி பகுதிகளில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இனாம் கரூர் பகுதியில், குடிநீர் திட்டப்பணி நிறைவு பெறாமல் இழுபறியாக உள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

அந்த தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, கரூர் மாநகராட்சி பகுதியில் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக மாநகராட்சியில், பல இடங்களில் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. குறைந்தபட்சம், ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. மேலும், பொதுக்குழாய்களிலும், உடைப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று, கரூர் அருகே தெரசா கார்னர் - கொளந்தானுார் சாலை கால்நடை மருத்துவ

மனை அருகில், குழாய் உடைப்பால், தண்ணீர் பல மணி நேரம் வீணாகி சாலையில் ஓடியது. கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அங்கு, பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க வசதியாக, குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அதிலும், குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாக்கடையில் செல்கிறது.

கோடை காலம் தீவிரம் காட்டும் நிலையில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம், போர்க்கால அடிப்படையில், உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us