தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கோழி பண்ணை, ஆடு வளர்ப்புக்குமானியம் பெற விண்ணப்பிக்கலாம்

கோழி பண்ணை, ஆடு வளர்ப்புக்குமானியம் பெற விண்ணப்பிக்கலாம்

கோழி பண்ணை, ஆடு வளர்ப்புக்குமானியம் பெற விண்ணப்பிக்கலாம்


ADDED : ஏப் 03, 2025 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2025 01:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோழி பண்ணை, ஆடு வளர்ப்புக்குமானியம் பெற விண்ணப்பிக்கலாம்

கரூர்:தேசிய கால்நடை இயக்கம் சார்பில், புதிய கோழி பண்ணைகள், ஆடு வளர்ப்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில், தேசிய கால்நடை இயக்கம் சார்பில், புதிய கோழி பண்ணைகள், செம்மறியாடு மற்றும் வெள்ளாடு பண்ணைகள், பன்றி பண்ணைகள் உருவாக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க, 25 லட்சம் ரூபாய் வரையும், செம்மறியாடு, வெள்ளாடு பண்ணை அமைக்க, 10 லட்சம் முதல், 50 லட்சம், பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க, 15 லட்சம் முதல், 30 லட்சம் ரூபாய் வரையும், வைக்கோல், ஊறுகாய்ப்புல், மொத்த கலப்பு உணவு, தீவன தொகுதி மற்றும் தீவன சேமிப்பு வசதி பண்ணையம் அமைத்திட தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் தனிநபர், சுயஉதவி குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள், விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில், https://nlm.udyamimitra.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும், விவரங்கள் அறிய அருகில் உள்ள மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us