/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கைவிடப்பட்ட தனியார் கிணறுகள்குப்பை கிடங்காக மாறும் அவலம்
/
கைவிடப்பட்ட தனியார் கிணறுகள்குப்பை கிடங்காக மாறும் அவலம்
கைவிடப்பட்ட தனியார் கிணறுகள்குப்பை கிடங்காக மாறும் அவலம்
கைவிடப்பட்ட தனியார் கிணறுகள்குப்பை கிடங்காக மாறும் அவலம்
ADDED : ஏப் 04, 2025 01:15 AM
கைவிடப்பட்ட தனியார் கிணறுகள்குப்பை கிடங்காக மாறும் அவலம்
கரூர்:கைவிடப்பட்ட தனியார் கிணறுகளை மூடாததால், கழிவு கொட்டும் இடமாக மாறி
வருகிறது.கரூர் மாநகராட்சியை ஒட்டி, பல பகுதிகளில் விவசாய பணிகள் நடந்து வந்தன. அங்கு, கிணறுகள் மூலம் பாசனம் செய்து வந்தனர். தற்போது, நகரமயமாக்கத்தால் வயல்கள் பெரும்பாலும் பிளாட்களாக மாற்றப்பட்டுள்ளன. ஏராளமான குடியிருப்புகளும் வந்து விட்டன. இப்பகுதிகளில், கைவிடப்பட்ட தனியார் கிணறுகள் பல உள்ளன. பாதுகாப்பற்ற முறையில் கிணறுகள் திறந்து கிடக்கிறது. கிணற்றை மூடாததால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். இந்த பகுதியில், சிறுவர்கள் விளையாடும் போது தவறி விழும் அபாயம் உள்ளது. சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. நீண்டகாலமாக கிணறுகள் திறந்த நிலையிலேயே, மூடப்படாமல் காணப்
படுகிறது. இதில் குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இது சுகாதார சீர்கேட்டை
ஏற்படுத்தி வருகிறது.