/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்பங்குனி உத்திர கொடியேற்று வி
/
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்பங்குனி உத்திர கொடியேற்று வி
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்பங்குனி உத்திர கொடியேற்று வி
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்பங்குனி உத்திர கொடியேற்று வி
ADDED : ஏப் 04, 2025 01:16 AM
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்பங்குனி உத்திர கொடியேற்று விழா
கரூர்:கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா நேற்று தொடங்கியது.
விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமி மற்றும் அலங்கார வள்ளி, சவுந்தரநாயகி, பசுபதீஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்தி சுவாமிகளுக்கு பல்வேறு வாசனை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்தனர். சிவாச்சாரியார்கள் யாகசாலை அமைத்து ஹோமம் நடத்தினர். அதில், பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தை, கோவில் கொடி
மரத்தில் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
பின்னர், கொடி மரத்திற்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து, சந்தன பொட்டு வைத்து, மேள தாளங்கள் முழங்க கொடியேற்று விழா தொடங்கியது. கொடி மரத்திற்கு பஞ்ச கற்பூர ஆரத்தியுடன், மகா தீபாராதனை காட்டப்பட்டது. அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தினமும், பல்வேறு வாகனங்களில் உற்சவர் திருவீதி உலா நடக்கிறது.
வரும், 8ல் சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. 9ல் திருக்கல்யாண உற்சவம், 11ல் தேரோட்டம், 12ல் தீர்த்தவாரி, 13ல் ஆளும் பல்லாக்கு, 14ல் ஊஞ்சல் உற்சவம், 15ல் வெள்ளி வாகனத்தில் உற்சவர் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

