/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எய்ட்ஸ் கட்டுபாடு ஊழியர்களுக்குஊதிய உயர்வு வழங்க வேண்டுகோள்
/
எய்ட்ஸ் கட்டுபாடு ஊழியர்களுக்குஊதிய உயர்வு வழங்க வேண்டுகோள்
எய்ட்ஸ் கட்டுபாடு ஊழியர்களுக்குஊதிய உயர்வு வழங்க வேண்டுகோள்
எய்ட்ஸ் கட்டுபாடு ஊழியர்களுக்குஊதிய உயர்வு வழங்க வேண்டுகோள்
ADDED : ஏப் 06, 2025 01:51 AM
எய்ட்ஸ் கட்டுபாடு ஊழியர்களுக்குஊதிய உயர்வு வழங்க வேண்டுகோள்
கரூர்:'ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாடு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம், கரூர் மாவட்ட தலைவர் அமல்தாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாடு திட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் எச்.ஐ.வி., ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்களில், 680 ஊழியர்கள், 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த, 2020 ம் ஆண்டு வரை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.
அதில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும், 5 முதல், 10 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிகிறவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. ஊதிய உயர்வு வழங்குமாறு வலியுறுத்தி வருகிறோம்.
தேசிய எய்ட்ஸ் கட்டுபாடு நிறுவனத்தின் பங்கீடு இல்லாமல், தேசிய சுகாதார குழுமம் கொடுக்கும் நிதியில் இருந்து, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும்பட்சத்தில், 5,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை குறை யும் அபாயம் உள்ளது.
எனவே, தற்போது உள்ள ஊதியத்தை குறைக்கும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாடு நிர்வாகத்தின் நடவடிக்கையை, முதல்வர் தலையிட்டு தடுக்க வேண்டும். மேலும், சம வேலை, சம ஊதியம் என்ற அடிப்படையில், ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

