தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பைக் மீது சரக்கு வாகனம்மோதி வாலிபர் உயிரிழப்பு

பைக் மீது சரக்கு வாகனம்மோதி வாலிபர் உயிரிழப்பு

பைக் மீது சரக்கு வாகனம்மோதி வாலிபர் உயிரிழப்பு


ADDED : ஏப் 08, 2025 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 01:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பைக் மீது சரக்கு வாகனம்மோதி வாலிபர் உயிரிழப்பு

குளித்தலை: திருச்சி மாவட்டம், தென்னுார் வெள்ளாள தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம், 23. திருச்சியில், தனியார் தெரபிக் சென்டரில் வேலை செய்து வந்தார்.

இவர் தனக்கு சொந்தமான, கேடிஎம் பைக்கில் தன்னுடன் பணியில் இருந்த தேனி மாவட்டம், அரண்மனை புதுார் வைகை தெருவை சேர்ந்த அபிநயா, 25. என்பவரை பைக்கில் பின்னால் அமர வைத்து, திருச்சியில் இருந்து கரூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு 8:45 மணியளவில் சென்றபோது, குளித்தலை பரிசில் துறை தனியார் பள்ளி அருகே எதிரே வந்த டாரஸ் சரக்கு வாகனம் பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அருணாச்சலம் இறந்தார்.

பின்னால் அமர்ந்து வந்த அபிநயா, பலத்த காயமடைந்து குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ

மனையில் அனுமதிக்கப்பட்டா.குளித்தலை எஸ்.ஐ. சரவணன் கிரி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில், விபத்து ஏற்படுத்திய டிரைவர் சரக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி விட்டார்.

காவிரி - குண்டாறு திட்டத்தில் வாய்க்கால் ஓரம் சாய்தளம் கட்டக்கூடாது:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us