தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அரவக்குறிச்சியில் முருங்கை விலைஅதிரடி குறைவு: விவசாயிகள் வேதனை

அரவக்குறிச்சியில் முருங்கை விலைஅதிரடி குறைவு: விவசாயிகள் வேதனை

அரவக்குறிச்சியில் முருங்கை விலைஅதிரடி குறைவு: விவசாயிகள் வேதனை


ADDED : ஏப் 09, 2025 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சியில் முருங்கை விலைஅதிரடி குறைவு: விவசாயிகள் வேதனை

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், முருங்கை விளைச்சல் அதிகரித்துள்ளதால், அதன் விலையில் சரிவு

ஏற்பட்டு, விவசாயிகள் கவலையில் உள்ளனர்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில், கால்நடை வளர்ப்பு தொழிலுக்கு அடுத்தபடியாக, முருங்கை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரும்பு முருங்கை, செடி முருங்கை, மர முருங்கை என, மூன்று வகையான முருங்கைகளை உற்பத்தி செய்கின்றனர். விதை விதைத்து முருங்கை உற்பத்தியும், முருங்கை கன்று நட்டு உற்பத்தியும் நடந்து வருகிறது. அரவக்

குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் முருங்கை சாகுபடி நடந்து வருகிறது. முருங்கை விதை மூலம் உற்பத்தியாகும்போது, அதன் பருவகாலம் எட்டுவதற்கு நட்டால் ஒன்றரை ஆண்டுகளாகும். முருங்கை கன்று வாங்கி, ஏழு மாதங்களில் பயன் தர துவங்கும். ஒரு கன்று சந்தையில், 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவற்றை வாங்கி விதைத்து, விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு, முருங்கை சாகுபடி மட்டுமே வாழ்வாதாரமாக விளங்குகிறது.

கடந்த பிப்ரவரி இறுதியில், முருங்கை காய்கள் விளைச்சல் குறைவாக இருந்ததால் கிலோ, 400 ரூபாய்-க்கு மேல் விலை போனது. பிறகு மார்ச் மாத துவக்கத்தில், முருங்கை சீசன் தொடங்கியது. தற்போது ஒரு கிலோ மரம் முருங்கை, ஐந்து ரூபாய், செடி முருங்கை ஆறு ரூபாய், கரும்பு முருங்கை ஏழு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி, பள்ளப்பட்டி, ஆத்துமேடு, ஈசநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கமிஷன் மண்டிகளில் முருங்கை காய்களை விற்று விடுவர். பின்னர் உள்ளூர் தேவைக்கு போக, பாக்கி உள்ள முருங்கை காய்களை பெங்களூரு, சென்னை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, விஜயவாடா பகுதிகளுக்கு லாரிகளில் அனுப்பி வருகின்றனர்.

தற்போது முருங்கை சீசன் தொடங்கியுள்ளதால், விலை குறைவாக கிடைக்கிறது என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். முருங்கையை நம்பி உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம், பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us