தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ரயில்வே குகை வழிப்பாதையில் மேற்கூரை அமைப்பதில் தாமதம்

ரயில்வே குகை வழிப்பாதையில் மேற்கூரை அமைப்பதில் தாமதம்

ரயில்வே குகை வழிப்பாதையில் மேற்கூரை அமைப்பதில் தாமதம்


ADDED : ஏப் 09, 2025 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரயில்வே குகை வழிப்பாதையில் மேற்கூரை அமைப்பதில் தாமதம்

கரூர்:கரூர் அருகே, புதிதாக அமைக்கப்பட்ட ரயில்வே குகை வழிப்பாதையில், மேற்கூரை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் ரயில்வே கேட்களை, நிரந்தரமாக மூடும் வகையிலும், விபத்துகளை தவிர்க்கும் வகையிலும், அதிகப்படியான வாகனங்கள் செல்லும் ரயில்வே கேட் பகுதியில், குகை வழிப்பாதை அல்லது மேம்பாலம் கட்டும் நடவடிக்கையில், இந்திய ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கரூர் - திருச்சி ரயில்வே வழித்தடத்தில், தொழிற்பேட்டை - சணப்பிரட்டி இடையே குகை வழிப்பாதை கட்டும் பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. அதை தொடர்ந்து, ரயில்வே கேட் நிரந்தரமாக

மூடப்பட்டது.தற்போது, குகை வழிப்பாதை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதால், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. 25 அடி பள்ளத்தில் குகை வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரயில்வே குகை வழிப்

பாதையில், இரண்டு மேற்கூரை அமைக்கும் பணிகள், சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. ஆனால், பணிகள் நிறைவு பெறாமல் தாமதமாகி வருகிறது. அதன் வழியாக, பொது மக்கள் சணப்பிரட்டி உள்ளிட்ட, பல்வேறு கிராம பகுதிகளுக்கு சென்று வரும் நிலையில், குகை வழிப்பாதையில், இரண்டு பக்கமும் உள்ள விளக்குகளும் சரிவர எரிவது இல்லை. இதனால், இரவு நேரத்தில் குகை வழிப்பாதையில் நடந்து செல்லும், பொது மக்கள், வாகனங்களில் செல்வோர்

அச்சத்துடன் உள்ளனர். எனவே, ரயில்வே குகை வழிப்பாதையில், உடனடியாக மேற்கூரை அமைக்கும் பணிகளை நிறைவு செய்ய, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us