/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விவசாய களத்தை சுற்றியுள்ளமுள் செடிகளை அகற்ற வேண்டும்
/
விவசாய களத்தை சுற்றியுள்ளமுள் செடிகளை அகற்ற வேண்டும்
விவசாய களத்தை சுற்றியுள்ளமுள் செடிகளை அகற்ற வேண்டும்
விவசாய களத்தை சுற்றியுள்ளமுள் செடிகளை அகற்ற வேண்டும்
ADDED : ஏப் 16, 2025 01:05 AM
விவசாய களத்தை சுற்றியுள்ளமுள் செடிகளை அகற்ற வேண்டும்
கிருஷ்ணராயபுரம்:வயலுாரில், விவசாய களத்தை சுற்றி அதிகமான முள் செடிகள் வளர்ந்து வருவதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் கிராமத்தில் சோளம், நெல், எள், சூரியகாந்தி, நிலக்கடலை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கிணற்று நீர் பாசன முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். பயிர்கள் அறுவடை செய்து, களத்தில் கொண்டு வந்து அதன் பிறகு தரம் பிரிக்கப்படுகிறது.
வயலுார் பஞ்சப்பட்டி பிரிவு சாலை அருகில், புதிதாக கட்டப்பட்டுள்ள விவசாய களத்தை சுற்றி அதிகமான முள் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் முழுமையாக களத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, களத்தை சுற்றி வளர்ந்து வரும் முள் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க
வேண்டும்.