தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பாதுகாப்புடன் தீபாவளி கொண்டாட்டம் கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பாதுகாப்புடன் தீபாவளி கொண்டாட்டம் கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பாதுகாப்புடன் தீபாவளி கொண்டாட்டம் கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு


ADDED : அக் 17, 2025 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2025 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடைபெற்றது. தீயணைப்புத்துறை வீரர்கள் பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது, பெற்றோர் முன்னிலையில் சிறுவர்கள்

பட்டாசு வெடிக்க வேண்டும். காலணி அணிந்தபடி வெடிக்க வேண்டும். பட்டாசுகளை மைதானங்கள் மற்றும் சமதளத்தில் வைத்து வெடிக்க செய்ய வேண்டும். பட்டாசு மற்றும் புஸ்வாணங்கள் வெடிக்கும் போது, அருகில் தண்ணீர் வாளி வைத்திருப்பது கட்டாயம். பட்டாசு வெடிக்கும் போது நீண்ட வத்திக்குச்சிகளை வைத்து, பக்கவாட்டில் சற்று தொலைவில் நின்று பற்ற வைக்க வேண்டும். மேலும் பருத்தி ஆடைகளை அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை, தீயணைப்பு வீரர்கள் வழங்கினர்.

அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன், அரசு கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us