/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேதமடைந்துள்ள பயணியர் நிழற்கூடம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
சேதமடைந்துள்ள பயணியர் நிழற்கூடம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
சேதமடைந்துள்ள பயணியர் நிழற்கூடம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
சேதமடைந்துள்ள பயணியர் நிழற்கூடம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 04, 2025 01:06 AM
கரூர்,  கரூர் அருகே சேதமடைந்துள்ள, பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர்-திருச்சி பழைய சாலை, திண்டுக்கல் ரயில்வே வழித்தடம் பாலம் அருகே, தொழிற்பேட்டை செயல்படுகிறது. மேலும், அதே பகுதியில் கோவில், ஓட்டல்கள் மற்றும் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன், பயணிகள் வசதிக்காக, அந்த பகுதியில் நிழற்கூடம் அமைக்கப்பட்டு, மின் விளக்குகளும் அமைக்கப்பட்டன.
பயணிகள் நிழற்கூடம் முன், அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தி பயணிகள் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியரை ஏற்றி செல்கின்றனர். இந்நிலையில், சில மாதங்களாக நிழற்கூடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின் விளக்குகளும், மேல் தளமும் உடைந்துள்ளது. கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், மழை பெய்து வரும் நிலையில், சேதமடைந்த நிழற்கூடத்தில், பயணிகள், மாணவ, மாணவியர் நிற்க முடியாமல் அவதிப் படுகின்றனர்.
எனவே, கரூர்-திருச்சி பழைய சாலை, திண்டுக்கல் ரயில்வே வழித்தடம் பாலம் அருகே, சேதமடைந்துள்ள நிழற்கூடத்தை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

