தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சேதமடைந்த பயணியர் நிழற்கூடம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சேதமடைந்த பயணியர் நிழற்கூடம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சேதமடைந்த பயணியர் நிழற்கூடம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு


ADDED : நவ 11, 2025 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2025 01:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், கரூர் அருகே சேதமடைந்துள்ள, பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர்-சேலம் பழைய சாலை, புகழூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. மேலும் அதே பகுதியில் கோவில், ஓட்டல்கள் மற்றும் ஏராளமான குடிருப்புகள் உள்ளன. இதனால், பல ஆண்டுகளுக்கு முன், பயணிகள் வசதிக்காக, அந்த பகுதியில் நிழற்கூடம் அமைக்கப்பட்டது.

அதில் பஸ்கள் நின்று பயணிகள் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியரை அழைத்து செல்கின்றனர்.

இந்நிலையில், சில மாதங்களாக பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. கரூர் மற்றும் சுற்று வட்டார

பகுதிகளில், மழை பெய்து வரும் நிலையில், சேதமடைந்த நிழற்கூடத்தில், பயணிகள், மாணவ, மாணவியர் நிற்க முடியாமல்

அவதிப்படுகின்றனர்.

எனவே, புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே, சேதமடைந்துள்ள பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அல்லது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us