போலீஸ் பாதுகாப்புடன் மாரியம்மன்விழாவை நடத்த நீதிமன்றம் உத்தரவு
போலீஸ் பாதுகாப்புடன் மாரியம்மன்விழாவை நடத்த நீதிமன்றம் உத்தரவு
ADDED : மே 01, 2026 05:38 AM
குளித்தலை :போலீஸ் பாதுகாப்புடன், மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குளித்தலை, முத்து பூபால சமுத்திரம் மகாமாரியம்மன் கோவிலில் வரும் 3ம் தேதி இரவு 10:00 மணியளவில் பூச்சொரிதல் விழாவுடன் திருவிழா தொடங்குகிறது. கோவில் பரம்பர தர்மகர்த்தா பத்மநாபன், குளித்தலை போலீஸ் ஸ்டேஷனில் பூச்சொரிதல் திருவிழாவிற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி கேட்டு விண்ணப்பம் அளித்தார். குளித்தலை இன்ஸ்பெக்டர் கருணாகரன், குறிப்பிட்ட சில காரணங்களை சுட்டிக்காட்டி அனுமதி மறுத்துவிட்டார். கோவில் தர்மகர்த்தா மதுரை உயர்நீதிமன்ற கிளையில், கோவில் திருவிழாவிற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி, 'குளித்தலை மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவிற்கு போலீசார் அனுமதி மறுத்ததை ரத்து செய்து, திருவிழாவை கோவில் நிர்வாகமும், போலீசாரும் இணைந்து செயல்படுத்த வேண்டும்' என உத்தரவு பிறப்பித்தார். இதனால் கிராம மக்கள்,
பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
