/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தி அருகே வெறிநாய்கள்கடித்து 15 ஆடுகள் பரிதாப பலி
/
க.பரமத்தி அருகே வெறிநாய்கள்கடித்து 15 ஆடுகள் பரிதாப பலி
க.பரமத்தி அருகே வெறிநாய்கள்கடித்து 15 ஆடுகள் பரிதாப பலி
க.பரமத்தி அருகே வெறிநாய்கள்கடித்து 15 ஆடுகள் பரிதாப பலி
ADDED : மார் 01, 2025 01:33 AM
க.பரமத்தி அருகே வெறிநாய்கள்கடித்து 15 ஆடுகள் பரிதாப பலி
கரூர்:க.பரமத்தி அருகே, வெறிநாய்கள் கடித்ததில், 15 ஆடுகள் உயிரிழந்தன.கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே பணப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம், 60; விவசாயி. இவர், 60க்கும் மேற்பட்ட ஆடுகளை பட்டியில், வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல், மேய்ச்சலுக்கு பிறகு,
பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்தார்.இந்நிலையில், நேற்று காலை ஆடுகளை மீண்டும் மேய்ச்சலுக்கு அனுப்ப, பரமசிவம் பட்டிக்கு சென்றார். அப்போது, வெறி நாய்கள் பட்டிக்குள் புகுந்து கடித்ததில், 15 ஆடுகள் உயிரிழந்தன. இதன் மதிப்பு, இரண்டு லட்சம் ரூபாய்.
மேலும், வெறிநாய்கள் கடிக்கு ஆளாகி, காயமடைந்த ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதனால், க.பரமத்தி பணப்பாளையம் பகுதியில், நேற்று பரபரப்பு
ஏற்பட்டது.