தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாயனுார் கதவணை நீர் வரத்து 2,364 கன அடி

மாயனுார் கதவணை நீர் வரத்து 2,364 கன அடி

மாயனுார் கதவணை நீர் வரத்து 2,364 கன அடி


ADDED : பிப் 01, 2025 12:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2025 12:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாயனுார் கதவணை நீர் வரத்து 2,364 கன அடி

கரூர், : தஞ்சாவூர் உள்ளிட்ட, டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக கடந்தாண்டு ஜூன், 12 ல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. குறுவையை தொடர்ந்து, சம்பா, தாளடி கால சாகுபடிகள் நிறைவு பெற்று, தற்போது அறுவடை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதனால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட, தண்ணீர் கடந்த ஜன., 28 ல் மூடப்பட்டது.குடிநீர் தேவைக்காக மட்டும், மேட்டூர் அணையில் இருந்து, நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு, 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு வந்த, தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்தது.

அமராவதி அணை, பவானி சாகர் அணை மற்றும் நொய்யல் ஆற்றில் வரும், தண்ணீர் காரணமாக நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 2,364 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது. அந்த தண்ணீர் முழுவதும், காவிரியாற்றில் திறக்கப்பட்டது.

* திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து ஆற்றில் நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 440 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 79.10 அடியாக இருந்தது. அமராவதி அணைக்கு, நேற்று காலை வினாடிக்கு, 138 கன அடி தண்ணீர் வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us