/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மொபட் மீது கார் மோதி விபத்து 4 பேர் காயமின்றி உயிர் தப்பினர்
/
மொபட் மீது கார் மோதி விபத்து 4 பேர் காயமின்றி உயிர் தப்பினர்
மொபட் மீது கார் மோதி விபத்து 4 பேர் காயமின்றி உயிர் தப்பினர்
மொபட் மீது கார் மோதி விபத்து 4 பேர் காயமின்றி உயிர் தப்பினர்
ADDED : மார் 02, 2025 06:57 AM
குளித்தலை: குளித்தலை அருகே, மொபட் மீது கார் மோதி குப்புற கவிழ்ந்த விபத்தில், நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருச்சி, உறையூர் பிள்ளைதோப்பு தெருவை சேர்ந்தவர் தனபால் மகன் மனோஜ், 24, பட்டதாரி. இவர் ஸ்கூட்டி மொபட்டில் நேற்று மாலை, 4:00 மணியளவில், தனது வீட்டிலி-ருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்தார். திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், குளித்தலை அருகே பின்னால் வந்த பொலிரோ கார், எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க, பிரேக் போட்ட போது, தனக்கு முன்னால் சென்ற மொபட் மீது கார் மோதி சாலையில் குப்புற கவிழ்ந்தது.
காரில் பயணம் செய்த திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை சேர்ந்த வெங்கடேஷ், தன் மனைவி. குழந்தை, தங்கையுடன் திரு-நள்ளாறு கோவிலுக்கு சென்று விட்டு, ஊருக்கு செல்லும்போது விபத்து ஏற்பட்டது. காரில் பயணம் செய்த நான்கு பேருக்கும், எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மொபட்டில் சென்ற மனோஜ் தலையில் பலத்த காயமடைந்து, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.குளித்தலை எஸ்.ஐ., சரவணகிரி மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, தலை குப்புற கவிழ்ந்து கிடந்த காரை மீட்டு, விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.