/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூரில் இலவச மருத்துவ முகாம்635 கால்நடைகளுக்கு பரிசோதனை
/
புகழூரில் இலவச மருத்துவ முகாம்635 கால்நடைகளுக்கு பரிசோதனை
புகழூரில் இலவச மருத்துவ முகாம்635 கால்நடைகளுக்கு பரிசோதனை
புகழூரில் இலவச மருத்துவ முகாம்635 கால்நடைகளுக்கு பரிசோதனை
ADDED : மார் 06, 2025 01:25 AM
புகழூரில் இலவச மருத்துவ முகாம்635 கால்நடைகளுக்கு பரிசோதனை
கரூர்:-புகழூரில், டி.என்.பி.எல்., சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமில், 635 கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.
புகழூர் நகராட்சிக்குட்பட்ட பாண்டிபாளைத்தில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையுடன் இணைந்து, இலவச கால்நடை மருத்துவ முகாம் நடத்தியது. நிறுவன பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் தொடங்கி வைத்தார். கால்நடை டாக்டர்கள் கண்ணன், சுதா ஆகியோர் கொண்ட குழுவினர் கால்நடைகளை பரிசோதனை செய்தனர். எருமை, பசுமாடு, நாய், கோழி மற்றும் ஆடுகள் என மொத்தம், 635 கால்நடைகளுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டது.
மாடுகளுக்கு சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை, நோய் மாதிரி ஆய்வு பணி, கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கால்நடைகளுக்கு ஆண்மை நீக்கம், கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் தடுப்பூசி, நாய்களுக்கான தடுப்பூசி ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து மாவு, கால்நடை மருந்தகத்திற்கு நுண்ணுயிர் நீக்கி இலவசமாக வழங்கப்பட்டன.
மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சாந்தி, உதவி இயக்குனர்கள் உமாசங்கர், லில்லி அருள்குமாரி உள்பட பலர் பங்கேற்றனர்.