/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆரம்ப சுகாதார மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
/
ஆரம்ப சுகாதார மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
ஆரம்ப சுகாதார மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
ஆரம்ப சுகாதார மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
ADDED : ஆக 26, 2024 02:27 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த இனுங்கூர் வட்டார அரசு மேம்படுத்தப்-பட்ட ஆரம்ப சுகாதார மையத்தின் கீழ், நச்சலுார், அய்யர்மலை, இனுங்கூர், பணிக்கம்பட்டி ஆகிய, நான்கு ஆரம்ப சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பணிக்கம்பட்டி சுகாதார மையத்தில், நான்கு துணை சுகாதார மைய செவிலியர்கள், பொது மக்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.
கடந்த, ஏழு மாதங்களாக சுகாதார மையம் அனைத்து அடிப்-படை வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஆனால், சுகாதார மையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கர்ப்பிணி பெண்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே, சுகாதார மையத்திற்கு வரும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாவட்ட நிர்வாகம், பணிக்கம்பட்டி ஆரம்ப சுகாதார மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.