/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை திருட்டு
ADDED : ஆக 13, 2024 05:56 AM
கரூர்: கரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, 13 பவுன் நகை திரு-டப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகில் என்.காளிபாளை-யத்தை சேர்ந்தவர் கண்ணன், 46. ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து இரவில் வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்ற பார்த்த போது, பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் வாங்கல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கைரேகை மற்றும் தடயங்களை பதிவு செய்தனர். அங்கு செயின், வளையல், தோடு, மோதிரம் உள்பட, 13 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.
வாங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.