/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆத்துப்பாளையம் அணையை தூர்வாரவேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
/
ஆத்துப்பாளையம் அணையை தூர்வாரவேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
ஆத்துப்பாளையம் அணையை தூர்வாரவேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
ஆத்துப்பாளையம் அணையை தூர்வாரவேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜூலை 11, 2011 03:01 AM
க.பரமத்தி 'ஆத்துப்பாளையம் அணையை பொதுப்பணி அதிகாரிகள் தூர் வார வேண்டும்' என நொய்யல் ஆத்துபாசன விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நொய்யல் ஆத்துப்பாளையம் அணையை கடந்த 1984 ம் ஆண்டு முதல்வராக இருந்த
எம்.ஜி.ஆர்., திறந்து வைத்தார். அணை மூலம் கார்வழி, துக்காட்சி, தென்னிலை
கிழக்கு, முன்னூர், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் நிலம்
பாசன வசதி பெற்று வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர்
சாயக்கழிவு நீரால் அணை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாய
நிலங்களுக்கு தண்ணீர் வரத்து அடியோடு நின்றதால், விவசாயம் கேள்விகுறியாக
மாறியது.
இதனால் விவசாய சங்கம் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து ஆத்துப்பாளையம் அணையில் சாயக்கழிவு நீர் விடக்கூடாது என கடந்த
2005 ம் ஆண்டு கோர்ட் தீர்ப்பளித்தது. இதனால் அணை க்கு சாயக்கழிவு நீர்
வருவது தடுக்கப்பட்டது. தற்போது அணையில் முட்புதர்கள் முளைத்துள்ளது.
மழைக்காலம் நெருங்குவதால், ஆத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேங்க
வாய்ப்புண்டு. இதனால் மழைக்காலம் தொடங்கும் முன்னர், ஆத்துப்பாளையம் அணையை
தூர் வாரி சுத்தப்படுத்த வேண்டும். இதனால் ஆத்துப்பாளையம் சுற்று வட்டார
பகுதிகளை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள்
பயன்பெறுவர்.எனவே, ஆத்துப்பாளையம் அணையை உடனடியாக தூர்வார பொதுப்பணி துறை
அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.