/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திருச்சி டி.ஐ.ஜி., கரூரில் நேரில் ஆய்வு
/
திருச்சி டி.ஐ.ஜி., கரூரில் நேரில் ஆய்வு
ADDED : ஜூலை 15, 2011 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: திருச்சி சரக டி.ஐ.ஜி., அமல்ராஜ் நேற்று காலை எஸ்.பி., அலுவலகத்தில் திடீர் ஆய்வு நடத்தினார்.
மாவட்ட எஸ்.பி., அலுவலகம், டி.எஸ்.பி., அலுவலகம் மற்றும் போலீஸ் ஸ்டேஷன்களில் வருடந்தோறும் உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு பணி நடத்துவது வழக்கம். நேற்று காலை 9 மணிக்கு கரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் திருச்சி சரக டி.ஐ.ஜி., அமல்ராஜ், எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு, ஆயுதப்படை மற்றும் தனிப்பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது எஸ்.பி., நாகராஜன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கும்மராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.