sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

க.பரமத்தி யூனியனில் கரூர் கலெக்டர் ஆய்வு

/

க.பரமத்தி யூனியனில் கரூர் கலெக்டர் ஆய்வு

க.பரமத்தி யூனியனில் கரூர் கலெக்டர் ஆய்வு

க.பரமத்தி யூனியனில் கரூர் கலெக்டர் ஆய்வு


ADDED : ஆக 12, 2011 01:21 AM

Google News

ADDED : ஆக 12, 2011 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

க.பரமத்தி: க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் 78 லட்ச ரூபாய் மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் ÷ஷாபனா நேரில் ஆய்வு செய்தார்.

தமிழக உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி திட்டங்களின் கீழ் பஞ்சாயத்து பகுதிகளில் நடைபெற்றும் வரும் வளர்ச்சி பணிகளை நேரில் ஆய்வு செய்து குறிப்பிட்ட காலத்தில் முடிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கரூர் மாவட்ட கலெக்டர் ÷ஷாபனா, க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பெரியநாதம்பாளையத்தில் இரண்டு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் மதிப்பில் நடுநிலை பள்ளி கட்டிடம் பராமரிப்பு, தும்பிவாடி, அணைப்பாளையம், புஞ்சை காளிகுறிச்சி, எலவனூர், சின்ன தாராபுரம், கூடலூர் மேற்கு மற்றும் கிழக்கு பஞ்சாயத்துகளில் 78 லட்ச ரூபாய் மதிப்பில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் வரவு, செலவு கணக்குகள், பணியாளர் குறைபாடு மற்றும் அலுவலக நடை முறைகள் குறித்து விளக்கம் கேட்டார்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பொது) பன்னீர் செல்வம், வீரமணி (பஞ்சாயத்து) உதவி செயற்பொறியாளர் சுப்பையா, மேலாளர் சுப்ரமணியம் உள்பட பலர் உடனிருந்தனர்.








      Dinamalar
      Follow us