/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரியம்மன் கோவிலில்சிறப்பு அபிஷேகம், பூஜை
/
மாரியம்மன் கோவிலில்சிறப்பு அபிஷேகம், பூஜை
ADDED : ஜன 18, 2025 01:27 AM
மாரியம்மன் கோவிலில்சிறப்பு அபிஷேகம், பூஜை
கிருஷ்ணராயபுரம், : கிருஷ்ணராயபுரம் யூனியனுக்குட்பட்ட சிந்தலவாடி பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடு, பூஜை நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று காலை அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. மகிளிப்பட்டி, சிந்தலவாடி, புனவாசிப்பட்டி, லாலாப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
* கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி கரையில், மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இங்கு, நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. மாயனுார், லாலாப்பேட்டை, திருக்காம்புலியூர் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.