/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சத்துணவு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 30, 2025 01:22 AM
சத்துணவு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கரூர் :தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட துணைத் தலைவர் பாஸ்கரன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை, சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ற வகையில், உணவு மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர் கீதாஞ்சலி, இணை செயலாளர் மல்லிகா, ஜெயமேரி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

