ADDED : ஜன 31, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
க.பரமத்தி விபத்தில்ஒருவர் பலி
கரூர்:கரூர் செங்குந்தபுரம், 8வது கிராஸ் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 47. கரூர் ராமகவுண்டனுார் தில்லை நகரை சேர்ந்தவர் வடிவேல், 40. இருவரும் நேற்று முன்தினம், 10.45 மணிக்கு க.பரமத்தி அருகே நாயக்கன்பட்டி பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு சென்று விட்டு, பைக்கில் திரும்பினர்.
பவித்ரம் வி.ஏ.ஓ., அலுவலகம் அருகில் கரூர் கோவை நெடுஞ்சாலையில் வந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். வாகனத்தை ஓட்டி வந்த பால சுப்பிரமணியன் உட்பட இருவரும் காயம் அடைந்தனர். இருவரும் கரூர் தனியார் மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டனர்.மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலசுப்பிரமணி சிகிச்சை பலனின்றி இறந்தார். க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.