/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சியில் மாற்றுத்திறன்மாணவர்களுக்கு மருத்துவ முகாம்
/
அரவக்குறிச்சியில் மாற்றுத்திறன்மாணவர்களுக்கு மருத்துவ முகாம்
அரவக்குறிச்சியில் மாற்றுத்திறன்மாணவர்களுக்கு மருத்துவ முகாம்
அரவக்குறிச்சியில் மாற்றுத்திறன்மாணவர்களுக்கு மருத்துவ முகாம்
ADDED : பிப் 14, 2025 01:06 AM
அரவக்குறிச்சியில் மாற்றுத்திறன்மாணவர்களுக்கு மருத்துவ முகாம்
அரவக்குறிச்சி, :அரவக்குறிச்சி, அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை சார்பில், அரவக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ முகாம், அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் செந்தில் குமார் முகாமை துவக்கி வைத்தார்.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்ட ஐஇ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி, வட்டார ஐஇ ஒருங்கிணைப்பாளர் லதா ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில், 51 மாற்றுத்திறன் மாணவர்கள் பங்கேற்றனர். மனநல மருத்துவர், கண் மருத்துவர், காது மருத்துவர், முட நீக்கியல் மருத்துவர் ஆகியோர் பங்கேற்று, இரு குழந்தைகளுக்கு புதிய அடையாள அட்டை, ஏழு குழந்தை
களுக்கு அடையாள அட்டை புதுப்பித்தல், நான்கு குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.
மேலும் இரு குழந்தைகளுக்கு அரசு தலைமை மருத்துவமனையில் பரிசோதனை செய்தல், 25 குழந்தைகளுக்கு இலவச பஸ் பயண அட்டை என மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை செய்து கொடுத்தனர். மேலும் முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு தேநீர், பிஸ்கட், மதிய உணவு மற்றும்
பயணப்படி ஆகியவை வழங்கப்பட்டது.
********************