/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சின்டெக்ஸ் தொட்டிமோட்டாரை சரி செய்யலாமே
/
சின்டெக்ஸ் தொட்டிமோட்டாரை சரி செய்யலாமே
ADDED : பிப் 20, 2025 01:56 AM
சின்டெக்ஸ் தொட்டிமோட்டாரை சரி செய்யலாமே
கரூர்:மோட்டார் பழுதானதால், சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படாமல் பயன்படாத நிலையில் உள்ளது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, 48 வார்டுகளிலும் பொது-மக்கள் பயன்பாட்டிற்காக போர்வெல் அமைத்து, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அப்பகுதி மக்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். இதில், கரூர் தெற்கு காந்திகிராமம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது மோட்டார் பழுதானதால், செயல்பாடின்றி பயனற்ற நிலையில் உள்ளது. கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், பொதுமக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் திணறி வருகின்றனர்.
காவிரி குடிநீர் வினியோகம் இல்லாத நேரங்களில், இந்த தொட்டியில் இருந்து மக்கள் தண்ணீர் உபயோகித்து வந்தனர். எனவே, மோட்டாரை பழுது நீக்கி, தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

