தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாயனுார் கதவணைக்குதண்ணீர் வரத்து குறைவு

மாயனுார் கதவணைக்குதண்ணீர் வரத்து குறைவு

மாயனுார் கதவணைக்குதண்ணீர் வரத்து குறைவு


ADDED : பிப் 23, 2025 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2025 01:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாயனுார் கதவணைக்குதண்ணீர் வரத்து குறைவு

கரூர்:மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து நேற்று குறைந்தது.கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 103 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது. அந்த தண்ணீர் முழுவதும், காவிரியாற்றில் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டது.

* திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி ஆற்றில் வினாடிக்கு, 600 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 440 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 60.47 அடியாக இருந்தது. அமராவதி அணைக்கு நேற்று காலை வினாடிக்கு, 50 கன அடி தண்ணீர் வந்தது.

* கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து நின்றது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 16.40 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 122 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us