/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளி மாணவர்களுக்குசட்ட விழிப்புணர்வு முகாம்
/
பள்ளி மாணவர்களுக்குசட்ட விழிப்புணர்வு முகாம்
ADDED : பிப் 27, 2025 02:25 AM
பள்ளி மாணவர்களுக்குசட்ட விழிப்புணர்வு முகாம்
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கிருஷ்ணராயபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினம் தலைமை வகித்தார். இதில் போக்சோ சட்டம், மூன்றாம் பாலினத்தாரின் உரிமைகள் மற்றும் சட்டம் சார்ந்த பிரச்னைகள், சட்டம் சாராத பிரச்னைகள் குறித்து விளக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ரமேஷ், மாயனுார் போலீஸ் ஸ்டேஷன் பெண் காவலர் கலாராணி, வழக்கறிஞர் ரகமத்துல்லா, தமிழ் ஆசிரியர் மணிகண்டன், முதுகலை
ஆசிரியர் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.