/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புரட்சி பாரதம் கட்சிசார்பில் ஆர்ப்பாட்டம்
/
புரட்சி பாரதம் கட்சிசார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 27, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புரட்சி பாரதம் கட்சிசார்பில் ஆர்ப்பாட்டம்
கரூர்:கரூர் மாவட்ட, புரட்சி பாரதம் கட்சி சார்பில், சட்டசபை தொகுதி செயலாளர் செல்லமுத்து தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தமிழகத்தில் ஜாதியின் பெயரால் நடக்கும் வன்கொடுமைகளை தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்ககோரியும், பட்டியல் இன மக்கள் மீது, தாக்குதல் நடத்துபவர்களை கைது செய்து, காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ளவும் கோஷம் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மாநில வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் பெரமையன், துணை செயலாளர் பெரியசாமி, சட்டசபை தொகுதி செயலாளர்கள் தேவராஜ், அறிவுமதி, சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.