/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேகத்தடையில் வெள்ளைவண்ணம் அடிக்க வேண்டும்
/
வேகத்தடையில் வெள்ளைவண்ணம் அடிக்க வேண்டும்
ADDED : மார் 06, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேகத்தடையில் வெள்ளைவண்ணம் அடிக்க வேண்டும்
கரூர்:-கருர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலை, ராயனுார் உட்பட பல்வேறு பகுதிகளில், சாலைகள் சீரமைக்கப்பட்டு வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில், வேகத்தடைகள் மீது, வெள்ளை வண்ணம் அடிக்காததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் வாகனங்களில் வேகமாக சென்று விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே, புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில், இரவிலும் ஒளிரும் வகையிலான வண்ணம் அடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.