/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு பள்ளியில் மாணவர்கள்சேர்க்கை விழிப்புணர்வு
/
அரசு பள்ளியில் மாணவர்கள்சேர்க்கை விழிப்புணர்வு
ADDED : மார் 06, 2025 01:49 AM
அரசு பள்ளியில் மாணவர்கள்சேர்க்கை விழிப்புணர்வு
குளித்தலை:குளித்தலை அடுத்த, நெய்தலுார் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில், மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் கண்ணதாசன் தலைமை வகித்தார்.
இதில், நெய்தலுார் பகுதியில் உள்ள சுற்று வட்டார கிராமங்களில், வீதி வீதியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அப்போது இல்லம்தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன் உள்பட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. நோட்டு புத்தகம், இலவச சீருடை, காலை, மதிய உணவு, யோகா, கணினி பயிற்சி, காணொளி வழிக்கல்வி, நீதி போதனை வகுப்பு, சிறப்பான விளையாட்டு கட்டமைப்பு, போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்துதல் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
வரும் 2025-26ம் கல்வியாண்டுக்கு, ஐந்து மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சான்று வழங்கப்பட்டது.