தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் வழித்தட ரயில்களில் மாற்றம்

கரூர் வழித்தட ரயில்களில் மாற்றம்

கரூர் வழித்தட ரயில்களில் மாற்றம்


ADDED : மார் 08, 2025 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2025 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் வழித்தட ரயில்களில் மாற்றம்

கரூர்:ஈரோடு-கரூர் வழித்தட ரயில்களில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஈரோடு-கரூர் வழித்தடத்தில் பாசூர்-ஊஞ்சலுார் ஸ்டேஷன்களுக்கு இடையே வழித்தட பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

மார்ச் 8, 11, 13, 15 தேதிகளில் காலை 7:20 மணிக்கு கிளம்பும், திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில், கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். கரூர் முதல் ஈரோடு வரையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 8, 11, 13, 15 தேதிகளில் காலை 5:10 மணிக்கு கிளம்பும் செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில், கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். இதே தேதிகளில் மறுமார்க்க ரயிலான ஈரோடு - செங்கோட்டை ரயில், கரூரிலிருந்து கிளம்பும். கரூர் முதல் ஈரோடு வரையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us