sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அரவக்குறிச்சி விவசாயிகளுக்குஉதவி இயக்குனர் வேண்டுகோள்

அரவக்குறிச்சி விவசாயிகளுக்குஉதவி இயக்குனர் வேண்டுகோள்

அரவக்குறிச்சி விவசாயிகளுக்குஉதவி இயக்குனர் வேண்டுகோள்


ADDED : மார் 15, 2025 02:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2025 02:11 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி விவசாயிகளுக்குஉதவி இயக்குனர் வேண்டுகோள்

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசு வழங்கும், பிரதமர் கவுரவ ஊக்க தொகையை விவசாயி அல்லாதவர்களுக்கு சென்று விடக்கூடாது என, இணைய வழியில் பதிவு செய்து மத்திய அரசு

விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்துகிறது. மேலும், ஒவ்வொரு விவசாயிக்கும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு, வேளாண் அடுக்ககம்

திட்டத்தின் கீழ், விவசாயிகளின் சுயவிபரத்தினை பதிவேற்றம் செய்யும் பணிகளை, வேளாண் துறை தீவிரப்படுத்தி உள்ளது.வேளாண்மை, தோட்டக்கலை, வணிகத்துறை சார்ந்த கள அலுவலர்கள், மகளிர் திட்ட சமுதாய பயிற்றுனர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆகியோரின் வாயிலாக, அனைத்து கிராமங் களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு, விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து பொது சேவை மையங்களிலும், இலவசமாக பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. எனவே, விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்கள், பட்டா, ஆதார் அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைபேசி இவைகளை கொண்டு அரசு கள அலுவலர்களையோ அல்லது பொது சேவை மையங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு, விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்டு, பின்னர் செயலியில் பதிவேற்றம் செய்து தனி அடையாள எண் வழங்கப்படும். இதுவரை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என, 19 தவணைகளாக பி.எம் கிசான் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே, 20வது தவணை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

எனவே, தனி அடையாள எண் பெறாத விவசாயிகள், விரைவாக வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி, தனி அடையாள எண் பெற வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us