sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நீர் ஆவியாகாமல் தடுக்கவேளாண் அதிகாரி யோசனை

நீர் ஆவியாகாமல் தடுக்கவேளாண் அதிகாரி யோசனை

நீர் ஆவியாகாமல் தடுக்கவேளாண் அதிகாரி யோசனை


ADDED : மார் 16, 2025 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2025 01:51 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நீர் ஆவியாகாமல் தடுக்கவேளாண் அதிகாரி யோசனை

கரூர்:-க.பரமத்தி, வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வன் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில், க.பரமத்தி பகுதியில் அதிக வெப்பம் காரணமாக கோடை சாகுபடி பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் வைக்கோல் அல்லது தென்னை நார் கழிவு போன்றவைகளை, நிலப்போர்வையாக இருக்குமாறு நன்கு துாவிவிட்டு, சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக பூமியில் படுவதை தடுக்கலாம். இம்முறையில் நீர் பாய்ச்சப்பட்ட நிலங்களில், நீர் ஆவியாவதை தடுப்பது மட்டுமின்றி களை வளர்வதையும் கட்டுப்படுத்தலாம். மக்காச்சோளம், பயறு வகைகளில் மேற்கண்டபடி மூடாக்கு போடுவதாலும், நீர் தேவை அறிந்து நீர் பாய்ச்சுவதாலும், மகசூல் இழப்பை குறைக்கலாம். மாலை நேரங்களில் நீர் பாய்ச்சும் பணியை செய்து, நீண்ட நேரம் வரை மண் ஈரம் காத்து வறண்ட சூழலிலிருந்து பயிரை காக்கலாம்.

வறட்சியிலிருந்து விடுபடலாம்கோடை மழை கிடைக்கும் போது, சரிவிற்கு குறுக்கே மழை நீரை வழிந்தோட செய்வதன் மூலம், நிலத்தின் ஈரத்தன்மையை அதிகப்படுத்தலாம்.

மேலும், நீர்ப்பாய்ச்சும்போது கூட மண் ஈரம், நீண்ட நேரம் காத்திட இம்முறை மிகவும் ஏற்றதாக இருக்கும். சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசன முறைகளை கடைப்பிடிக்கும் போது, வறட்சியிலிருந்து விடுபட ஏதுவாக இருக்கும்.

முருங்கை சாகுபடியில் ஊடுபயிராக நிலக்கடலை, உளுந்து, நரிபயிறு அல்லது வெங்காயம் போன்ற பயிர்களை சாகுபடி செய்தலில் உள்ள நீர் மேலாண்மையால், இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். வரப்பு பயிராக ஆமணக்கு பயிரடலாம்.

காலை, மாலை வெயிலின் தாக்கம் குறைந்த நேரத்தில் களையெடுத்தல், மருந்து தெளித்தல், உரமிடல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். கடும் வெயில் நேரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமலும், மர நிழல் உள்ள பகுதிகளில் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us