தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குண்டும், குழியுமான சாலைவாகன ஓட்டுனர்கள் அவதி

குண்டும், குழியுமான சாலைவாகன ஓட்டுனர்கள் அவதி

குண்டும், குழியுமான சாலைவாகன ஓட்டுனர்கள் அவதி


ADDED : மார் 20, 2025 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2025 01:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குண்டும், குழியுமான சாலைவாகன ஓட்டுனர்கள் அவதி

கரூர்:கரூர் அருகே, சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.

கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் பகுதியில் தொடக்கப்பள்ளி, கோவில்கள் மற்றும் ஏராளமான வீடுகள் உள்ளன. அந்த வழியாக, 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள், வாகனங்களில் சென்று வருகின்றனர். அமராவதி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கும், சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.

இந்நிலையில், பெரிய ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் சாலையில், பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது

அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us