/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
/
மாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED : மார் 25, 2025 01:03 AM
மாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
கிருஷ்ணராயபுரம்:வரகூரில், மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, வரகூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை, பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பல விதமான அபிேஷகம் செய்து மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்
பட்டது. நேற்று காலை அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், கிடா வெட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்
களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.