தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கிடப்பில் போடப்பட்டுள்ளமழை நீர் வடிகால் பணி

கிடப்பில் போடப்பட்டுள்ளமழை நீர் வடிகால் பணி

கிடப்பில் போடப்பட்டுள்ளமழை நீர் வடிகால் பணி


ADDED : மார் 28, 2025 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2025 01:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிடப்பில் போடப்பட்டுள்ளமழை நீர் வடிகால் பணி

கரூர்:நெரூர் பார்க் நகர் மற்றும் கிருஷ்ணன் கோவில் தெருவில், கிடப்பில் போடப்பட்ட மழை நீர் வடிகால் பணியை, விரைவில் முடிக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நெரூர் வடபாகம் பஞ்சாயத்துக்குட்பட்ட, நெரூர் பார்க் நகர் மற்றும் கிருஷ்ணன் கோவில் தெருவில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு வடிகால் கட்டப்படவில்லை. மழை காலங்களில், தெருக்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. பொதுமக்கள் நடந்தும் மற்றும் வாகனங்களில் செல்லவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, 2023ம் ஆண்டு மழை நீர் வடிகால் கட்டுமான பணி தொடங்கப்பட்டது.

இப்பணி முழுமை பெறாமல், பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மழை பெய்யும்போது தண்ணீர் வடிய வழியின்றி வடிகாலில் தேங்கி நிற்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோயை பரப்புவதுடன், துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. பாதியில் நிற்கும் மழைநீர் வடிகால் பணியை, விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us