/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு பள்ளியை பசுமையாக மாற்றிய மாணவர்கள்
/
அரசு பள்ளியை பசுமையாக மாற்றிய மாணவர்கள்
ADDED : மார் 28, 2025 01:09 AM
அரசு பள்ளியை பசுமையாக மாற்றிய மாணவர்கள்
அரவக்குறிச்சி:புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 1955ம் ஆண்டு துவக்கப்பட்டது. 30 ஆசிரியர்கள், 467 மாணவர்களை கொண்டு பள்ளி செயல்பட்டு வருகிறது.
பள்ளியில் மரம் நடும் விழா, வனவிலங்குகள் பாதுகாப்பு, நெகிழி ஒழிப்பு, மூலிகை செடிகள் வளர்ப்பு, காய்கறி தோட்டம், பறவைகளை பாதுகாப்பது என, பல்வேறு முன்னெடுப்புகளை மாணவர்கள் எடுத்துள்ளனர்.
தாவரவியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கிய ெஜரால்டு மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து, அனைத்து உயிரினங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், டைனோசர் உருவத்தை உருவாக்கி பள்ளி வளாகத்தில் வைத்துள்ளனர்.
கடந்த டிசம்பரில், சிறந்த பசுமை பள்ளிக்கான பணிகளை முன்னெடுத்து, மூன்று மாதத்தில் பள்ளி வளாகத்தை சுற்றி உள்ள அனைத்து மரங்களின் வகைகளை அறிந்து கொள்ளும் வகையில், மரங்களின் பெயர்களை அமைத்து பராமரித்து வருகின்றனர். மேலும், மூலிகை தோட்டங்களை மாணவர்களை உருவாக்கி உள்ளனர்.
பள்ளியில் சிறிய குளம் உருவாக்கி, அதில் மீன் வளர்ப்பை செய்து வருகின்றனர். பள்ளிக்கு வரும் மாணவர்கள், தினமும் மரக்கன்று களுக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிறந்தநாள் அன்று, பள்ளி வளாகத்தில் மரக்கன்று களை நட்டு வைப்பது என்ற முன்னெடுப்பை கொண்டு வந்துள்ளனர்.
மேலும் பறவைகளின் தாகத்தை தீர்ப்பதற்காக, மரங்களில் பானையில் கூடுகள் அமைத்து அதன் மேல் தண்ணீர் மற்றும் உணவுகளை வைத்து வருகின்றனர். பள்ளியில் சோலார் அமைத்து, மின்சார கட்டணம் இல்லாமல் பள்ளியை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்கள், மாணவர்கள் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் மாவட்ட அளவில் சிறந்த பசுமை பள்ளி என்ற சான்றிதழை வழங்கி உள்ளது. கடந்த வாரம் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தில் நான்கு பசுமை பள்ளிகளில் இப்பள்ளியும் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு, பசுமை பள்ளிக்கான சான்றிதழை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.